படித்ததில் ரசித்தது:
“பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை.
மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த வரையறைக்குள்ளும் சிக்காத வகையைக் கொண்டது.
நேற்று அப்படியாகவும் இன்று இப்படியாகவும் நாளை எப்படியாகவும் மாறும் வித்தைகளைக் கொண்டது. அதனால் தான் அதை, வாழ்வு என்கிறார்கள்.”
– பத்திரிகையாளர் ஏக்நாத்தின் ‘அவயம்’ நாவலிலிருந்து ஒரு பகுதி.