ஃபேஸ்புக்கில் நாம் ஏன் பதிவிடுகிறோம்?

உலகம் முழுவதும் மக்கள் ஃபேஸ்புக்கில் ஏன் எழுதுகிறார்கள், புகைப்படங்களை பதிவிடுகிறார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களை கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நாமும் அதை படித்துப் பார்ப்போம்…

முகநூல் நிறையபேருடன் இணைந்திருப்பதுபோலக் காட்டி இறுதியில் நிஜமான பழகுதல் இன்றி தனிமைப்படுத்தி ஒரு மெய்நிகர் யதார்த்தத்தில் (virtual reality) தள்ளுகிறது. பொறாமையை அதிகரிக்கிறது.

மற்றவர்களோடு ஒப்பிட்டு மனக்கசப்பை உருவாக்குகிறது. முகநூல் மற்றவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்று அறிவதும், தன் வாழ்வில் என்ன நடக்கிறது என அறிவிக்கும் ஒரு போதையை உருவாக்குகிறது. அரசியல் பங்களிப்பை ஊக்கப்படுத்துகிறது.

வெகுமதி தேடும் மூளைக்குத் தீனி போட்டு அதனை சுறுசுறுப்பாக்கி விடுகிறது.

முகநூல் படங்களையும் கருத்துக்களையும் பார்ப்பதின்மூலம் வலியை மறக்கடிக்கிறது.

நேரத்தை வீணடிப்பவர்கள்கூட முகநூலில் ஈடுபடுவதின் மூலம் ஏதோ உருப்படியான செயலில் ஈடுபட்டிருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.

முகநூலில் சுறுசுறுப்பாக இருப்பதின் மூலம் மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது.

பர்மிங்காம் பல்கலை ஆய்வின்படி முகநூலில் தங்களைக் கவர்ச்சிகரமாக காட்டிக் கொள்வதின் மூலம் ஒருவித பொறாமையை உருவாக்கி நிஜவாழ்க்கையில் மற்றவர்களோடு நெருக்கமாக பழகுவதைக் குறித்து விடுகிறது.

முகநூல் உளவியலாளர் Graham Jones கருத்துப்படி முகநூலை சிறப்பாகப் பயன்படுத்துவதை அறியாத நாம் நட்பை பலப்படுத்துவதற்கு பதிலாக பகையை அதிகம் வளர்த்து விடுகிறோம்.

நிஜமான வாழ்வின் பிரச்சினைகளிலிருந்து பொய்யான தப்பித்தலுக்கு வழி வகுக்கிறது முகநூல்.

Comments (0)
Add Comment