உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்!

– ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல்

உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா,

“உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் நிலையானது.

இரு தரப்பினரும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு, இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தப் போரின் தொடக்கத்தில் இருந்தே, அமைதி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பலி கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்பதை இந்தியா நம்புகிறது” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment