ஏழைகளுக்கு எப்போது காலம் மாறுமோ?

நினைவில் நிற்கும் வரிகள்:

****

தாயில்லை தந்தையில்லை
தக்கதுணை யாருமில்லை

ஒய்வில்லாக் கவலையாலே
ஒரு வழியும் தோன்றவில்லை

இலைஇல்லை மலரும் இல்லை
கனிஇல்லை காயும் இல்லை
தலையில்லா உருவம் போலே
வாழ்வும் ஆனதே

விதியே உன்வேலையோ?
இதுதான் ஆசையோ?

கதியில்லா ஏழை
எங்கள் காலம் மாறுமோ?

நிலவில்லா வானம் போலே
நீரில்லா ஆறு போலே
சிலையில்லாக் கோயில் போலே
வீடும் ஆனதே

ஒருநாளில் ஓயுமோ?
இருநாளில் தீருமோ?

பலநாளும் துன்பமானால்
உள்ளம் தாங்குமோ?

கரையேறும் பாதை காணோம்
கண்ணீரில் ஓடமானோம்

முடிவில்லா வேதனை
ஒன்றே கண்டலாபமோ?

-1960-ம் ஆண்டு டீ.சத்யன் நடிப்பில் வெளிவந்த ‘ஆளுக்கொரு வீடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி,
இயக்கம்: எம்.கிருஷ்ணன்,
குரல்: கே. ஜமுனாராணி.

Comments (0)
Add Comment