டெல்லியில் அதிகரிக்கும் வெப்பம்!

– பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் 40.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

வரும் நாட்களில் இன்னும் அதிக வெப்பநிலை பதிவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு டெல்லியில் உள்ள பள்ளிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விளக்கமளித்த கல்வித்துறை அதிகாரிகள், “அதிக வெப்பம் நிலவுவதால், பள்ளி நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், வகுப்பறைக்கு வெளியே உள்ள மைதானங்களில் நடத்தப்படும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெயில் குறையும் வரை பிற்பகல் நேரத்தில், இனி மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட மாட்டார்கள்.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ – மாணவியருக்கும் அவசரகால மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். அதில், நீர்போக்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, ‘குளூக்கோஸ், எலக்ட்ரோலைட் பவுடர்’ ஆகியவை இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment