திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், ஆவணப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், இதழாசிரியர், சித்திரக்காரர்… இப்படிப் பன்முகங்களைக் கொண்டவர் இந்தியத் திரை மேதை சத்யஜித் ரே அல்லது சத்யஜித் ராய்). வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர்.
சினிமா பற்றிய பெரிய புரிதல் இல்லாதபோது, உலகப் புகழ்பெற்ற அவரது முதல் படமான ‘Pather Panchali’ பார்த்தேன். அந்தப் படத்தின் காட்சி மொழியும் உணர்வும் இன்றும் மனத்தில் பதிந்திருக்கிறது.
பிறகு, ‘Charulata, ‘Shatranj Ke Khilari’ போன்ற படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். 1980-ல் வெளியான அவரது ‘Pikoo’ இன்னொரு மிக முக்கியமான படம் என்று படித்திருக்கிறேன். பார்க்க வேண்டும்.
உலகத் திரை மேதை சார்லி சாப்ளினுக்குப் பிறகு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்ற அரிய பெருமைக்குரியவர் சத்யஜித் ரே.
ஒவ்வொரு பட வெளியீட்டுக்கும் முன்னால் ‘டீஸர்’ வெளியிடுவது இன்று பிரபலமாக இருக்கிறது. அந்த டீஸர் பாணி விளம்பரத்தை தனது முதல் படத்துக்கே
(1955-ல்) பயன்படுத்திய முன்னோடி சத்யஜித் ரே. இப்படி அவரைப் பற்றிய வியப்புக்குரிய செய்திகள் நிறைய உண்டு.
இன்று (மே 2) ‘பாரத ரத்னா’ சத்யஜித் ரேயின் 101-வது பிறந்த நாள். ஒரு சினிமா ரசிகனாக அவருக்கு, பணிவான வணக்கம்.
– நன்றி இளையபெருமாள் சுகதேவ் முகநூல் பதிவு