நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக் கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவி வர்மா.
அன்றைய கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ம் ஆண்டு, ஏப்ரல் – 29 ஆம் தேதி உமாம்பா – நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர் ராஜா ரவி வர்மா. சிறு வயதிலிருந்தே தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து ஓவியத்தைக் கற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரம் அரண்மையில், அரண்மனை ஓவியர் ராமசாமியிடம் 9 ஆண்டுகள் பயின்றார்.
இலைகள், மரப்படைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்களைத் தயாரித்தே அங்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன.
ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார்.
தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் அரண்மனைக்கு வந்திருந்த போது, அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
அப்போது சென்னை ஆளுநராக இருந்த பக்கிங்கஹாம் கோமகனார் ஓவியத்தை இவர் தத்ரூபமாக வரைந்தது அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அதன்பிறகு கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைக்கத் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து மும்பைக்கு இடம்பெயர்ந்ததோடு, அங்கு தனது அச்சகத்தையும் நிறுவினார். முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது.
1873ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதில் விருதைப் பெற்றது.
தென்னிந்தியப் பெண்களை இந்துக் கடவுளாக படைத்தார்.
புகழ்பெற்ற காவிய நாயகிகளான துஷ்யந்தன், சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவங்களை வரைந்து உலகப் புகழ்பெற்றார் டெல்லியில் நடைபெற்ற ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் இருக்கும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.