தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்தக் குழு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் குழு ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றது.
இந்தக் குழுவுக்கு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்கள், ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை இந்தக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளது.
இந்த அறிக்கையையும் பரிசீலித்து ஆணையம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.