எது பிரம்மாண்டம்?

அரண்மனைகள், நாடாளும் மன்றங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் என மனிதன் உருவாக்கிய பிரமமாண்டகள் எல்லாம் அதிகாரம் சார்ந்த விஷயம்.

மனிதன் தனது அதிகாரத்தை நிருபிக்க பிரம்மாண்டங்களை உருவாக்குகிறான். ஆனால் உண்மையில் பிரம்மாண்டம் இயற்கையே. மற்றவற்றின் இருப்பை நிராகரிக்கக் கூடியது எதுவும் இயற்கையில் கிடையாது.

மரம் இயற்கையில் ஓர் பிரம்மாண்டம். அதன் வேர்களுக்கிடையில் பாம்புகள் வசிக்கும். மேற்பகுதியில் ஆயிரம் பறவைகளின் வாழ்விடம். மனிதனுக்கு நிழலை தந்து, பூமிக்கு மழை தந்து, மண்ணுக்கு வலு ஏற்றி தனது இருப்பையே பிரம்மாண்டம் ஆக்கிக் கொள்கிறது.

– தொ.பரமசிவன்

Comments (0)
Add Comment