தலைவர் 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினி!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது.

இதன்பின்னர் பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியவுடன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ரஜினி திரைப்படத்தை, நெல்சன் இயக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் ஒரு சில ரஜினி ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான நெல்சன், தனது டிவிட்டர் முகவரியில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளது குறித்த அறிவிப்பை நீக்கினார்.

இதனால் ரஜினி திரைப்படத்திலிருந்து நெல்சன் விலகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் நெல்சனை நேரில் அழைத்துப் பேசியுள்ளார்.

அப்போது நெல்சனுக்கு ஆறுதல் கூறியுள்ள ரஜினிகாந்த், தொடர்ந்து பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதோடு, விரைவில் பணிகளைத் துவங்கலாம் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் நெல்சன், தனது ட்விட்டர் முகவரியில் ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்கும் அறிவிப்பை சேர்த்துள்ளார்.

இதன்மூலம் ரஜினி நெல்சன் இணையும் படத்தின் அறிவிப்பு மீண்டும் உறுதியாகியுள்ளது.

படத்தின் எழுத்துப் பணிகள் ஏறத்தாழ நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்

Comments (0)
Add Comment