கலைத் தாயின் ‘ஒரு தாய் மக்கள்’!

மதவாதிகள்:

மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியில் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.

இந்து முன்னணிக் காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது.

குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.

நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும். ஆர்.எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.

மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

– (29.03.1982-ல் காவல்துறை மானியத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரை)

Comments (0)
Add Comment