மருத்துவப் பட்டங்களைத் திருப்பி அளிப்போம்!

 – குடியரசுத் தலைவருக்கு 2000 மருத்துவர்கள் கடிதம்

கொரோனா மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி போனது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்று தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் மே 3-ம் தேதி முடிந்து அதன் பின்பே மாநிலங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆனால் மே 21-ம் தேதியே 2022-ம் ஆண்டிற்கான முதுகலை நீட் தேர்வு நடைபெற உள்ளதால் தாங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேர்விற்கு தயாராக குறைந்தது 2 மாதங்களாவது வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், தேர்வை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்வு ஒத்தி வைக்காவிட்டால், தங்களது மருத்துவப் பட்டங்களைத் திருப்ப அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய தங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் முதுகலை நீட் தேர்விற்கு தயாராகும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Comments (0)
Add Comment