ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் அங்கம்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்!

நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான். அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.

கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்.
அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்.
புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.

சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது.

வயிற்றுப் பசியைத் தீர்த்துத் கொண்டால் மட்டும் போதாது. விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஒரு ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்கள் திறமை என்பது காலப் போக்கில் மாறுவது என்றாலும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன.

உழைப்பே உயர்வு தரும். உயர்வோம். உழைப்போரே உயர்ந்தவர். உழைப்பவராலேயே உலகம் உயர்ந்திடும். உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள்.

– தகவல்: ஹயாத், சென்னை

Comments (0)
Add Comment