காந்தியின் மனைவி கஸ்தூரிபாயின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 11, 1869) அவரைப் பற்றி காந்தி சொல்லியவை.
“பல முக்கியமான விஷயங்களில் கஸ்தூரி பா எனக்கு பின்னணியில் இருந்து அல்ல, எனக்கும் மேல் அதிகமாகப் பங்காற்றியவர். அவருடைய தவறாத ஒத்துழைப்பு மட்டும் இல்லை எனில் நான் நரகத்தில் விழுந்திருப்பேன்.
நான் விழிப்புடனும் என்னுடைய தீர்மானமான முடிவுகளில் உண்மையாக இருக்கவும் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
என்னுடைய எல்லா விதமான அரசியல் போராட்டங்களிலும் என்னுடன் இருந்தார். களத்தில் இறங்கிப் போராடவும் தயங்கியவர் இல்லை.
நடைமுறை அளவுகோலின்படி வேண்டுமென்றால் அவர் கல்வி அறிவு அற்றவர் என்று அழைக்கப்படலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை உண்மையான கல்விக்கு சிறந்த உதாரணம் கஸ்தூரி பா தான்.”
நன்றி: முகநூல் பதிவு