‘அபூர்வ ராகங்கள்’ – கதவைத் திறந்தபடி ரஜினி அறிமுகமான முதல் படத்தில் அவருக்கான வசனங்கள் மிகவும் குறைவு தான்.
அந்த வசனங்களையும் அவர் பேசியிருப்பது அப்போது இருந்த கற்பகம் ஸ்டூடியோவில் இருந்த டப்பிங் தியேட்டரில்.
இயக்குநர் திலகமாகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவரான கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் சொந்த ஸ்டூடியோ இது.
அந்த இடம் எல்லாம் தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறிவிட்டன.