கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்திலேயே சென்னை இராயப்பேட்டை சண்முக முதலி தெருவில் உள்ள வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தது.
அப்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த வீட்டைக் கேட்டார், ஆனால் ஒரு வடநாட்டு செல்வந்தர் (சேட்) சிவாஜி கேட்ட தொகையை விட அதிகம் தருவதாக சொன்னார்.
ஆனால், கலைவாணர் அந்த வீட்டை சிவாஜி அவர்களுக்கு கொடுத்தார்.
அதற்கு என்.எஸ்.கே சொன்ன காரணம், “நான் விற்ற வீட்டின் பால்கனியில் ஒரு வடநாட்டு செல்வந்தர் நிற்பதைவிட, ஒரு நல்ல கலைஞன் (சிவாஜி) நிற்பதைத் தான் நான் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவேன்” என்றாராம்.
அதுதான் கலைவாணரின் சிந்தனை!