பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை விவசாயிகளிடையே பரப்பி வந்த இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் – 6, 1938) அவரது சில பொன்மொழிகள்.
- இயற்கை விவசாயம் என்பதன்
அடிப்படை இயற்கையுடன்
இணைந்த உணவு உற்பத்தி. - பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
என மனிதனை மட்டும்
உயிராகப் பார்க்காமல்
எல்லாவற்றையும் நம்மோடு
அரவணைத்துக் கொள்வதே
ஆன்மீகப் பார்வை. - விவசாயம் என்பது
வியாபாரம் அல்ல
வாழ்க்கை முறை.! - பூச்சி தாக்காத பாரம்பரிய
ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.
மண்ணை வளப்படுத்த வேண்டும். - நம்முடைய தேவைக்காக
எப்பொழுது சமரசம் ஆகிறமோ
அப்பொழுதுதான் தீயவற்றின்
பாதையில் நாம் கால் வைக்கத்
தொடங்குகிறோம். - ஆன்மீக ரீதியில் பார்க்கும் போது
மனிதர்களின் நலனை மட்டும்
பார்த்தால் போதாது.
அது மிகவும் குறுக்கலான பார்வை. - ஒவ்வொரு உயிரும் பிறவற்றை
சார்ந்தே வாழ்கின்றது என்பதை
ஆன்மீக ரீதியாகவே உணர முடியும்.
அறிவியல் ரீதியாக மட்டுமே
பார்த்தால் அது அழிவினை நோக்கியே
இட்டுச் செல்லும். - இயற்கை விவசாயத்தை
சிறப்பாக செய்ய,
கால்நடை வளர்ப்பு அவசியம்.
மர வளர்ப்பும் முக்கியமானது. - பாரம்பரிய முறைகளே
என்றும் நிலையானது. - விரதமே மகத்தான
மருத்துவம். - இயற்கை ஒருபோதும் தவறு
செய்வதில்லை.
உடல் ஒருபோதும்
தன் கடமையை
நிறுத்துவதில்லை. - சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
வீரனை கோழையாக்குவதும்
இல்லை. கோழையை வீரன்
ஆக்குவதும் இல்லை.
அவனை யார் என்று
அவனுக்கு காட்டும். - பருவநிலை மாற்றம்தான்
இன்றைக்கு பல்வேறு
பிரச்சனைகளுக்கும்
அடிப்படையாக இருக்கிறது.
அதை சரி செய்ய வேண்டுமானால்
கண்டிப்பாக காடுகளை
வளர்க்க வேண்டும். - நஞ்சில்லாத உணவை உற்பத்தி
செய்ய வேண்டும் என்ற
உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள்
இயற்கை விவசாயத்திற்கு
மாறிவிடுவார்கள். - 50 வயது வரை உடம்பு தான்
உன்னதம் என நினைக்கும் மனது,
அதற்குப் பிறகு ஆன்மாவை
ஆராதிக்கிறது. - மனிதர்களைச் சுற்றியுள்ள மரங்கள்,
செடிகள், கொடிகள், கால்நடைகள்
மற்றும் பறவைகள் என அனைத்தும்
ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழல்
இந்த உலகில் இருக்க வேண்டும். - இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி,
களைக்கொல்லி, நஞ்சுக்களை
பயன்படுத்தாத விவசாயம் தான்
இயற்கை விவசாயம். - உண்ணா நோன்பு
இருக்கும் போது
நம் உடலுக்குள் இருக்கும்
தேவையில்லாத கழிவுகள்
தன்னாலே வெளியேறி
விடுகின்றன.