– ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரை முடிவுக்கு வரும் முயற்சியில் ஐ.நா. பொதுச்சபை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா. உயரதிகாரி மாஸ்கோ செல்ல உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்த குட்டரெஸ்,
“ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற பின்னர் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்ல உள்ளார்.
அவரை சந்திக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது.
ஏமன், உக்ரைன் என உலகில் எல்லா இடங்களிலும் சண்டையை நிறுத்தும் நடவடிக்கையை நாங்கள் கைவிடவில்லை என்பதை இந்த பயணம் எடுத்துக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
02.04.2022 3 : 30 P.M