அப்ப இதையெல்லாம் கவனிங்க!
நாம் அனைவரும் பொதுவாக, பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, யுபிஐ (UPI) ஆப், நெட் பேங்கிங் (NET Banking) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.
டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மேலும் மோசடி செய்பவர்கள் உங்கள் பணத்தைத் திருட புதிய வழிகளை முயற்சித்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
எனவே, யுபிஐ பேமெண்ட்களைச் செய்யும்போது மோசடியில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை பார்க்கலாம்.
உங்கள் யுபிஐ பயன்பாட்டை புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.
இணைய குற்றவாளிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்கள் யுபிஐ பயன்பாட்டை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு புதுப்பித்தலிலும், நிறுவனங்கள் இணைய பாதுகாப்பை மேம்படுத்த புதிய அம்சங்களை வழங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், யுபிஐ பயன்பாட்டை எப்போதும் புதுப்பிக்கவும்.
பணம் பெறுவதற்கு ஒருபோதும் பின்னை உள்ளிட வேண்டாம்.
எந்தவொரு யுபிஐ செயலியிலும் பணத்தைப் பெறுவதற்கு எந்தப் பயனரும் தங்களின் பின் நம்பரை உள்ளிட வேண்டியதில்லை.
எனவே, உங்களுக்கு பணம் அனுப்பும் போது உங்கள் பின்னை போடுமாறு யாராவது உங்களிடம் கேட்டால் கவனமாக இருங்கள்.
மோசடி அழைப்புகள் ஜாக்கிரதை.
சைபர் குற்றவாளிகள் மக்களுக்கு இணைப்புகளை அனுப்புவதன் மூலம் நேரடியாக பயனர்களை அழைத்து அவர்களின் கடவுச்சொற்கள் போன்றவற்றைக் கேட்கிறார்கள்.
பொதுவாக தொலைபேசி அழைப்புகள் மூலம் வங்கிகள் அத்தகைய விவரங்களைக் கேட்பதில்லை. எனவே, அத்தகைய அழைப்பின் வலையில் நீங்கள் விழக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின் (PIN) நம்பரை குறிப்பிட வேண்டாம்.
இந்த நாட்களில், மக்கள் மெயில் மற்றும் வாட்ஸ்அப்பில் கவர்ச்சியான சலுகைகளைப் பெறுகிறார்கள், குறிப்பாக பண்டிகை காலங்களில்.
அத்தகைய இணைப்புகள் ‘பரிசு’ அல்லது ‘கேஷ்பேக்’ பெற உங்கள் பின் மற்றும் பிற விவரங்களை உள்ளிடுமாறு கேட்கின்றன. எனவே, அத்தகைய இணைப்புகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முடிந்தவரை அதுபோன்ற இணைப்புகளை திறக்காமல் இருப்பது நல்லது..
வலுவான கடவுச்சொல்லை உருவாக்கவும்.
யுபிஐ சேவைக்கு பதிவு செய்யும் போது வலுவான பின்னை அமைக்கவும்.
யாரும் எளிதில் யூகிக்க முடியாத பின்னை உருவாக்கவும். யுபிஐ பின் பொதுவாக 4 அல்லது 6 இலக்கங்களைக் கொண்டிருக்கும்.
26.03.2022 10 : 50 A.M