சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல்-6 ம் தேதி கூடுகிறது!

– சபாநாயகர் அப்பாவு தகவல்

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 19-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற விவாதம் 24-ம் தேதி நிறைவு பெற்றது.

விவாதத்தின் இறுதி நாளன்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், ஏப்ரல் 6-ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்ற கூட்டத்தொடர் பேரவை மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இதையொட்டி வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், இந்த அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ள சட்டப்பேரவையில், எந்தெந்த தேதிகளில் எந்த மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment