இசையும் ரசனையும் சந்தித்தால்…!

இந்தியன் எக்ஸ்பிரசில் ஒருமுறை சோமுவின் மகன் சண்முகத்தை நேர்காணல் செய்த போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

சோமு சாப்பிட்டு முடித்ததும் கூடவே நடந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. அவர் கைகழுவும் இடத்துக்கு சென்று குழாயைத் திருப்பி, அவர் கை கழுவும் வரை நின்று பின்னர், மறுபடியும் அவரைத் தொடர்ந்திருக்கிறார்.

ஏதோ லயிப்பிலும் மதிப்பிலும் ஆர்வத்திலும் இருப்பவர்கள் மட்டுமே அதை செய்திருக்க முடியும்.

சோமுவின் பாட்டு அப்படி லயிப்பை ஏற்படுத்தும்.

பல நேரங்களில் அவர் சம்பிரதாயத்தை மீறினார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் இராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்தில் இருந்து வெளிப்படும் நாதம் பிரமிப்பை ஏற்படுத்துவது போலவே சோமுவின் ராக ஆலாபனையும், விருத்தம் பாடும் முறையும் ஒரு ரசிகனைக் கட்டிப்போடும்.

“ஒண்ணு சொல்லுகேன் கேட்டுக்கோ. நல்லா சைக்கள் ஓட்டத் தெரிந்தவன்தான் இரண்டு கையை விட்டுக்கு ஓட்டுவான். சோமுவும் அது போலத்தான்.”

இசைக் கச்சேரி ஒன்றில், மதுரை சோமுவின் கச்சேரி மேடையருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

சிவாஜியின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அன்று நடந்த கச்சேரிக்கு சான்றாக இருந்திருக்க வேண்டும். ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது சிவாஜியின் முகம்.

நன்றி: கோலப்பன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment