– கேரள உயர்நீதிமன்றம் வேதனை
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், தன் 14 வயது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, இளைஞர்களுடன் சண்டையிட்டார். அப்போது ஒரு இளைஞர், ‘ஹெல்மெட்’டால் சிறுமியின் தந்தையைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, “பதின்பருவ பெண்ணும், அவரது தந்தையும் சாலையில் சேர்ந்து செல்லுகையில் மோசமான கிண்டல்களை எதிர்கொள்ளும் நிலை இருப்பது துரதிர்ஷ்ட வசமானது” என்றார்.
குற்றவாளிக்கு முன் ஜாமின் தர மறுத்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன் சரண் அடைந்த பின் சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
25.03.2022 12 : 30 P.M