தன்னைக் கட்டுப்படுத்தும் மன வலிமை தேவை!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அதைப் பார்த்து தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பீஸ்ட் படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடக்கூடியது என்று படத்தின் நீளத்துக்கான நேரத்தையும் தணிக்கைக் குழு வெளியிட்டுள்ளது.

பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் படத்திலிருந்து ‘அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனிடையே விஜய் அடுத்ததாக, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பீஸ்ட்’ படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் குறித்து பேசிய ஷைன் டாம், ”பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது என் அம்மாவுடன் நடிகர் விஜய்யை சந்தித்தேன்.

அப்போது என் அம்மா நடிகர் விஜய்யிடம் நீங்கள் கோபப்படமாட்டீர்களா? எனக் கேட்டார்.

அதற்கு நடிகர் விஜய், நானும் சாதாரண மனிதன்தான் எனக்கும் கோபம் வரும். ஆனால் கட்டுப்படுத்திக்கொள்வேன் என்று தெரிவித்தார்.

கோபத்தைக் கட்டுப்படுத்த கடுமையான மன வலிமை தேவை. அது நடிகர் விஜய்யிடம் இருக்கிறது” எனக்  கூறினார்.

Comments (0)
Add Comment