சீர்காழி

சீர்காழியை சுற்றி நிறைய கோவில்கள் உள்ளன. மார்கழி, தை மாதங்களில் அங்கு நிறைய கச்சேரி நடக்கும். பள்ளிக்குகூட போகாமல் சீர்காழி அதனை கேட்கச் செல்வார்.

மகனின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்ட தந்தை அவரை இசைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். சீர்காழி இசை படித்தாலும் அவருக்கு நடிப்பின் மீது கூடுதல் ஆசை.

அதனால் அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களை அப்படியே பாடுவார்.

சீர்காழியின் தாய் மாமன் எஸ்.பி.கிருஷ்ணன் நாடகம் நடத்தி வந்தார். அந்த நாடக குழுவில் சேர்ந்த சீர்காழி நாடகத்தில் நடித்துக் கொண்டே பாடத் தொடங்கினார். தேவி நாடக சபாவில் சேர்ந்து மாத சம்பளத்துக்கு நாடகத்தில் நடித்தார்.

அப்போது சினிமா உலகம் என்ற பத்திரிகையை நடத்தி வந்த பி.எஸ்.செட்டியார், சீர்காழியை சினிமாவுக்கு அழைத்து வந்தார். இப்போது நெகட்டிவ்கள் அழிந்து விட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்தார் சீர்காழி.

இசை மேதை ஜி.ராமநாதன் சீர்காழியின் குரலை கேட்டு வியந்து.

“யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் உன்னை போல் யாராலும் பாட முடியாது. நடிப்பை விட இசையில் கவனம் செலுத்து” என்று அறிவுரை கூறி சீர்காழியை முழுக்க முழுக்க இசையின் பக்கம் திருப்பினார்.

இசையின் உச்சத்தை சீர்காழி தொட்டாலும் அவருக்கிருந்த நடிப்பு ஆசை விடவில்லை. ஆனாலும் அதற்கென ஒரு பாலிசி வைத்துக் கொண்டு பக்தி மற்றும் புராணப் படங்களில் மட்டும் நடித்தார்.

கந்தன் கருணை, திருமலை தென்குமரி, அகத்தியர், ராஜராஜ சோழன், தசாவதாரம், மீனாட்சி திருவிளையாடல் படங்களில் நடித்தார்.

நண்பர் ஏ.பி.நாகராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க வை ராஜா வை என்ற படத்தில் மட்டும் போலீஸ் அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சில நடிகர்களின் கேரக்டர் அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றி விடும்.

கே.பி.சுந்தரமாம்பாள் என்றால் அவ்வையார், என்.டி.ராமராவ் என்றால் கிருஷ்ணன், சிவாஜி என்றால் வீரபாண்டிய கட்டபொம்பன். அதுபோல சீர்காழி கோவிந்தராஜன் என்றால் அகத்தியர்.

– நன்றி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment