தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், தலைவர் நாசர் முன்னிலையில் எல்லோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இனி நடிகர் சங்கத்தின் சார்பாக ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும், சங்கத்திற்கு தேவையான நிதியை திரட்டவும், பாதியில் நிற்கும் கட்டிடத்தை கட்டி முடிக்கவும் உறுதி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உள்பட 9 பேரை நியமித்திருக்கிறார்கள்.
இந்தக் குழுவின் நிர்வாக அறங்காவலராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக கமல்ஹாசன், சச்சு, லதா, நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.