ஒர்க்கிங் ஸ்டில்ஸ் – படப்பிடிப்பின் போது இடையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வித்தியாசமும், தனி அழகும் கொண்டவை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி இணைந்து நடித்த சில படங்களில் ‘மகாதேவி’ முக்கியமான படம்.
அதிரடி அடுக்குச் சிரிப்புக்குப் பெயர் போன வில்லன் நடிகரான பி.எஸ்.வீரப்பா இந்தப் படத்தில் பேசும் “மணந்தால் மகாதேவி. இல்லையென்றால் மரணதேவி” என்கிற ‘பஞ்ச்’ வசனம் அப்போது மிகவும் பிரபலம்.
1956 ல் மகாதேவி படத்திற்கான படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தபோது லைட்டிங் மேன் நிற்கும் இடத்தில் சாவித்ரி மேக்கப்புடன் நிற்கும் காட்சியில் அவருடைய முகத்தில் வெளிச்சம் பட்டும் ஒளிரும் புகைப்படம் எத்தனை இயல்பான அழகு?
பிரத்யேகமான இந்தப் புகைப்படத்தை அப்போது எடுத்திருப்பது கோல்டன் ஸ்டூடியா.
நடிகன் குரல் – செப்டம்பர் 1956 இதழில் இருந்து…