பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம் 17.03.1990
இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நல்லா விளையாடினாலும், வெற்றிகள் பெற்றாலும் இந்திய ரசிகர்களைக் கவர்வது மிகவும் கடினம்.
இப்படி பேட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இந்திய மக்களை திரும்பிப் பார்க்க வைத்தவர்.
1990 ஆம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் ஹிசார் என்னுமிடத்தில் ஹர்விர் சிங் நேவால் மற்றும் உஷாராணி நேவாலுக்கு பிறந்தவர் சாய்னா நேவால்.
இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் பேட்மிண்டன் வரலாற்றில் புதிய சரித்திரத்தை படைத்தவர்.
2003-ம் ஆண்டிலிருந்து சர்வதேச போட்டிகளில் கால்பதித்து இந்தியாவிற்காக பதக்கங்களை குவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அடுத்தப்படியாக சிறுவர்களையும், இளைஞர்களையும் பேட்மிண்டன் மட்டையை கையில் பிடிக்கச் செய்தவர்.
ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்தியாவிற்கு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சாய்னா நேவால். 2012-ல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.
பேட்மிண்டன் போட்டியில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் வெற்றிக்கோப்பையை முத்தமிட்டவர்.
ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் அபாரமாக விளையாடி 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார்.
சாய்னா பெற்ற விருதுகள்:
2009-ல் இந்திய அரசின் அருச்சுனா விருது
2010-ல் இந்திய அரசின் தாமரை திரு விருது
ஆகஸ்ட் 2010-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
2012 நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.