சுகர் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!

சமீப காலமாக உடல்ரீதியாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சர்க்கரை நோய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் வரும் பிரச்சனையாக மாறி வருகிறது.

சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோரை ஆட்கொண்டுள்ளது. உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலையில் இல்லாத போது சர்க்கரை நோய் உண்டாகிறது.

இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க உடலில் இன்சுலின் அளவு சரியாக இருப்பது அவசியமானது.

எடுத்துக் கொள்ளும் உணவு சத்தானதாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். மேலும் நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவானது சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது கட்டாயமாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

அதிக சர்க்கரை உள்ள உணவு பொருட்களை தவிர்த்தல், சோடாக்கள், பேக்கரி உணவுகள், கடைகளில் விற்கப்படும் இனிப்பு நிறைந்த குளிர்பானங்கள், கேக்குகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் ஆனால் வெள்ளை பிரட் தவிர்க்க வேண்டும்.

தற்போது அவசரமாக காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு சர்க்கரை சேர்க்கப்பட்ட தானிய உணவு வகைகளான கார்ன் பிளேக்ஸ் போன்ற இனிப்பு சேர்க்கப்பட்ட தானிய உணவுகளை விரும்பி எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் அதில் இருக்கும் ஆபத்து தெரியவில்லை.

இந்த உணவுகளில் கொழுப்பு செரிமான கார்போ-ஹைட்ரேட், சர்க்கரை, கலோரி ஆகியவை அடங்கியிருப்பதாக இரத்த சர்க்கரையின் அளவு உயர்வதால் தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு, அதிக இனிப்பு தன்மை உள்ள பழங்கள் குறைவாக எடுத்துக் கொள்ளலாம். அதே போன்று அதிக உணவை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளை காலை உணவாக சிறுதானியங்களின் தயாரிக்கப்பட்ட உணவுகள், ஓட்ஸ், சம்பா கோதுமை, பார்லி, ராகி தோசை, இட்லி, கம்பு புட்டு, இட்லி மற்றும் தானியங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவாக வடித்த சாதம் ஏதேனும் ஒரு குழம்பு, காய்கறி பொரியல், கீரை கட்டாயம் இருக்க வேண்டும்.

இரவு உணவாக காய்கறி கலந்த உப்புமா, கிச்சடி, சப்பாத்தி, ராகி ரொட்டி போன்ற உணவாக எடுத்துக் கொள்ளலாம். மாலையில் சுண்டல் ஏற்றது.

ஊறவைத்த குறைவான வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், முந்திரி, பாதாம், போன்ற பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இவைகளில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் உடல் நலத்திற்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.

மேலும் நெல்லிக்காய்கள், ப்ளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் போன்றவையும் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

இலவங்கப்பட்டை

வாசனை நிறைந்த உணவான இந்த பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இலவங்கப்பட்டை போட்டு வடிகட்டி குடித்து வந்தால் ஆக்ஸிஜனேற்றம் ஏற்றப்படுகிறது.

இது இன்சுலின் உணர்திறன் அதிகரிப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.

ப்ரோக்கோலி

இந்த ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, சல்ஃபோராபேன் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

அசைவ உணவுகளின் மீன் சால்மன், ஹெர்ரிங், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 அதிகம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக இருக்கும்.

இவைகளில் இரத்த குளுக்கோஸின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதுடன் இதய நோய் பாதிப்பை குறைக்கும்.

  • யாழினி சோமு
Comments (0)
Add Comment