யுத்தம் யாருக்காக?

விதிகள்  ஒன்றுதான் ‌ எப்போதும்.
நீ எந்தப் பக்கம் என்பதே கேள்வி;
நடுநிலை என்பது
இங்கு சிகண்டிகளுக்கு
கூட சாத்தியம் இல்லை;

தூது, பேச்சுவார்த்தை எல்லாம்
சம்பிரதாயமாகவே நடத்தப்படும்.
சகுனியின் நோக்கம்
கடைசிவரை
யாருக்கும் புரியாது‌.

பாவம் மக்கள் மட்டுமே
அகதிகளாய்..
அனாதைகளாய்..
உடைமை இழந்து
உறவுகளை இழந்து…
அதனால் என்ன..
தர்மம் ஜெயிக்க வேண்டும்.

ஆனால் எது‌ தர்மம்
எனத் தீர்மானிக்க முடியாமல்
கிருஷ்ணர்கள்
குழம்பிப்போய்
சொந்த ஊருக்கு
திரும்புகிறார்கள்.

சுடுகாடாய்ப்போன
அஸ்தினாபுரத்தில்
யாரும் அறியாமல்
அழுகிறான் தர்மன்.

  • ஆதிரன்
Comments (0)
Add Comment