‘முள்ளிவாய்க்கால்’ – சில ஓவிய நிழல்கள்!

முள்ளிவாய்க்கால் – நம்முடைய சமகாலத்தில் நமக்குப் பக்கத்தில் சந்திக்க நேர்ந்த அவலம். தமிழனத்தின் அடையாளமே ஒரு நாட்டில் சிதைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இன அழிப்பிலிருந்து எப்போது தமிழினம் மீளும் என்கிற பெருமூச்சுடன் கூடிய கேள்விகள் ஒருபுறம்.

குறைந்தபட்சம் இந்த அவலத்தை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டுபோக எத்தனிக்கும் உணர்வாளர்களின் பெரு முயற்சிகள் இன்னொருபுறம்.

பலத்த அதிர்ச்சியளித்து, இன்னும் அதிர வைத்துக் கொண்டிருக்கிற இந்தக் கொடூரம் நம்முடைய ஓவியக்கலைஞர்களைப் பாதித்திருப்பதற்கான சான்றாய் உங்களிடம் இருக்கும் இந்த ஓவியத் தொகுப்பு.

குருதியும், வலியும் முதுகில் குத்திய நம்பிக்கைத் துரோகமுமாய் தமிழ் பேசும் தொன்மையினத்தைப் பன்னாடு ஆயுதத்தோடு, தாக்கி அழித்தபோது ‘நீயுமா?’ என்று மரண வேளையில் பேட்ட ஜூலியஸ் சீஸரைப் போல, ஈழத்தமிழர்களால் அந்த இன அழிப்பின்போது, தனக்கு எதிராக ஒன்று திரண்ட கூட்டணியைப் பார்த்துக் கேட்கக்கூட முடியவில்லை.

ஈழத்தில் உள்ள தமிழர்களின் நெஞ்சில் பயமும், மௌனமும் கெட்டி தட்டி உறைந்திருக்கின்றன.

சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகள் – இறுதிக்கட்டக் கொடூரத்திற்குச் சாட்சியான சிலருடைய வாக்கு மூலங்கள் – அவசரத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படப் பதிவுகள், இவற்றிற்கு இடையில் தமிழகத்தில் உள்ள சில ஓவியர்களை அணுகி – இது தொடர்பான அவர்களுடைய ஓவியங்களைத் தொகுக்க முயற்சித்த குறைந்தபட்ச முயற்சியே இத்தொகுப்பு.

பத்திரிகையாளர் மணா தொகுத்து பரிதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘முள்ளிவாய்க்கால் – ஓவிய நிழல்கள்’ என்ற நூலில் இருந்து சில ஓவியப் பதிவுகள்:

சென்னைப் புத்தகக் கண்காசியில் பரிதி பதிப்பகம் – அரங்கு எண் 47, 48

தொடர்புக்கு – 72006 93200

Comments (0)
Add Comment