எம்.கே.டி: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

எம்.கே. தியாκகவதர் – மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 – நவம்பர் 1, 1959)
தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.

1934 ஆம் ஆண்டு ‘பவளக்கொடி’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே (சென்னை பிராட்வே) திரையரங்கில் ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

தொடக்கத்தில் பல நாடகங்களில் பெண்வேடம் ஏற்று நடித்தார் எம்.கே.டி.

சிறிய வயதில் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.

எப். ஜி. நடேசன் அய்யர் அவர்கள் அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டர் ஆக பணியாற்றி வந்தார்.

அவர் அப்போது சொந்தமாக திருச்சியில் நடத்தி வந்த இரசிக இரஞ்சன சபாவில் நடந்து வந்த அரிச்சந்திரா நாடகத்தில் அரிசந்திரனின் மகனாக லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் நடித்தார்.

அரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன், அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார்.

அதேநேரத்தில் நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.

இவர் இசையிலும், நடிப்பிலும் சிறந்து விளங்குவார் என வாழ்த்தி நடேச அய்யர் அவர்கள் ‘பாகவதர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

அதனால் தியாகராஜன் என்ற பெயருடன் இணைந்து பாகவதர் என்ற பட்டத்துடன் சேர்த்து தியாகராஜ பாகவதர் என்று பெயர் ஏற்பட்டது.

தியாகராஜ பாகவதருக்கு கமலம், ராஜம் என்ற இரு மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவி கமலத்தின் குடும்பம் மட்டுமே சென்னையில் வசித்து வருகின்றது.

ஒரு முறை அப்போதைய பிரிட்டானிய ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்கள் இயக்கிய ஒரு நாடகத்தை, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து கொடுத்தார்.

அந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் ஆங்கிலேயர்களின் எதிர்பார்த்த வெற்றியைவிட அதிகமான வசூலை கொடுத்ததால்.

அந்த நாடகத்தில் நடித்த தியாகராஜ பாகவதர்க்கு சம்பளமாக ஒரு லட்சம் ரூபாயுடன் திருச்சிக்கு அருகே உள்ள திருவெறும்பூர் என்ற விவசாய வளமிக்க ஊரை பரிசாக தந்தனர்.

ஆனால் அதை வாங்க மறுத்து அந்த ஊரை மீண்டும் ஆங்கிலேயர்களிடமே தந்துவிட்டு ஒரு லட்சம் ரூபாயயை இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கு நிவாரண நிதியாக வழங்கி விட்டார்.

அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment