பிப்ரவரி 27 ஞாயிறு அன்று ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழில் வெளிவந்துள்ள முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்துள்ள ‘எம்.ஜி.ஆர்’ நூல் பற்றிய விமர்சனம் இது:
“தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்வு ஆய்வாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அள்ள அள்ளக்குறையாத சுவாராசியங்கள் நிறைந்தவை.
அவரைப் பற்றிப் பல்வேறு கோணல்களில் பல நூறு நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும், தற்போது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகி இருக்கும் நூல்களில் கவனம் ஈர்க்கும் நூல்களில் ஒன்று.
எம்.ஜி.ஆரின் பேரனும், வழக்கறிஞருமான முனைவர் குமார் ராஜேந்திரன் ‘எம்.ஜி.ஆர்’ என்னும் தலைப்பில் ஏராளமான தகவல்களையும், அரிய ஒளிப்படங்களையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கெட்டி அட்டை, வழவழப்பான வண்ணக் காகிதத்துடன் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பு.
‘தாய்’ தயாரிப்பில் மெரினா புக்ஸ் (www.marinabooks.com) நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘எம்.ஜி.ஆர்’ என்ற 800 பக்கங்களும் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட அழகான இந்த நூலின் விலை ரூ.1800.
சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிமுகச் சலுகையாக 30 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.1250-க்கு கிடைக்கிறது.
அத்துடன் எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது மனைவி திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் எழுதிய ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்’ என்ற 150 ரூபாய் மதிப்புள்ள நூல் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த நூலிலும் எம்.ஜி.ஆரைப் பற்றிய இதுவரை வெளிவராத பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் பற்றிய மேலும் தகவல்களுக்கு…
மெரினா புக்ஸ்
ஸ்டால் எண் – 261 & 262
அலைபேசி: 88834 88866 / 75400 09515
*