ரஷியாவுக்கு எதிரான போரில் தனித்து விடப்பட்டுள்ளோம்!

– உக்ரைன் அதிபர் உருக்கம்

உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ராணுவ நிலைகளைத் தாக்குவதாக கூறும் ரஷியா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உருக்கமுடன் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி,

“ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

25.02.2022  2 : 10 P.M

Comments (0)
Add Comment