403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19-ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதன்படி, உ.பி.யில் 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில், காலை 4 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
23.02.2022 12 : 30 P.M