அதிகாரத்தில் உள்ளோருக்கு தனிச் சட்டமா?

– கேரள உயர் நீதிமன்றம் கேள்வி

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிணராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு, சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள கட்சிகளின் கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்துமாறு கடந்த ஆண்டு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்கம் ஒன்றின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஒரு கட்சியினர் தங்கள் நிலத்தில், சட்டவிரோதமாக கொடிக் கம்பத்தை நிறுவி உள்ளனர்’ என குற்றஞ்சாட்டப் பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமசந்திரன் பிறப்பித்த உத்தரவில்,

அனுமதி இல்லாமல் யார் கொடிக் கம்பங்களை நிறுவினாலும், அது சட்டவிரோதமாகும். அதிகாரத்தில் உள்ளவர்கள் நிறுவினாலும், அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம் என, தனித்தனி சட்டங்கள் இருக்க முடியாது என்று அவர் உத்தரவிட்டார்.

பின், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, சட்டவிரோத கொடிக் கம்பங்களை அகற்ற, மார்ச் 28ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

22.02.2022  5 : 30 P.M

Comments (0)
Add Comment