நண்பர்களைத் தேர்வு செய்வது எப்படி?

தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள்.

ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை.

அது குறித்த வழிகாட்டுதல்கள்.

* உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.

* நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

* உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள். தீய நண்பனோடு இருப்பதைவிட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது.

* பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு.

* தீய பழக்கங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒழுக்கத்தை மீறிய செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.

* நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களைத் தேர்வு செய்யும் போது தேவை கவனம்.

* நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும்.

  • நன்றி: மாலை மலர்
Comments (0)
Add Comment