பிப்ரவரி-14ல் வெளியாகும் ‘பீஸ்ட்’ படப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி படக்குழுவினர் வெளியிட்டுள்ள பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் முழு பாடல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment