1972 – அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி.
தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 14 ஆம் தேதி நிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார்.
அக்டோபர் 17 ஆம் தேதி கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அ.தி.மு.கழகம் உருவானது.
கழகத்தின் கொடி தீர்மானிக்கப்பட்டது. பிறந்த உடனே சுறுசுறுப்பானது கழகம். தமிழகம் முழுக்கக் கிளைகள் துவக்கப்பட்டன. மொத்தம் 6000 கிளைகள்.
பத்து லட்சம் உறுப்பினர்கள். அதுவும் இருவாரத்திற்குள்.
கட்சி துவக்கப்பட்டு இருவாரத்திற்குள் இந்த அளவுக்கு உறுப்பினர்களைச் சேர்த்த கட்சியான அ.தி.மு.கழகம் வியந்து பார்க்கப்பட்டது.
உருவானபோதே தொண்டர்கள் பலத்துடன் முளைத்த கட்சியைத் துவக்கத்தில் குறைத்து மதிப்பிட்டவர்கள் பிறகு போகப் போக அசந்து போனார்கள்.
இன்றைக்கும் அ.தி.மு.க. என்கிற இயக்கத்தை ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் அதன் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தான்.!
07.02.2022 4 : 30 P.M