ஊர் சுற்றிக் குறிப்புகள் :
*
கொரோனாக் காலத்தில் பெரும்பாலான திரையங்குகள் வெறிச்சோடி விட்டன என்பதை நேரடியாகவே உணர முடிந்தது அண்மையில் சென்னையில் உள்ள நவீனத் திரையரங்கில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் பார்க்கச் சென்றபோது.
மாறுதலான படம்; கச்சிதமான வசனங்கள், தேர்ச்சியான நடிப்பு, கவனமான இயக்கம் – எல்லாம் இருந்தும் திரையங்கில் இருந்த மொத்தப் பார்வையாளர்களே எட்டுப் பேர் தான்.
வீட்டில் டி.வி பார்க்கிற மாதிரி திரையரங்கில் அமர வேண்டியிருக்கிறது.
இது தான் பல திரையரங்குகளின் அன்றாட நிலை, இனி புதிய படங்கள் வெளிவரும் வரை.
வலிமை, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளிவந்தால் இந்த நிலைமை மாறலாம். ஆனால் திரையரங்குகள் தொடர்ந்து செலவுகளைச் சமாளிக்க முடியுமா?
ஓ.டி.டி.கள் ஒருபுறம் பெருகிக் கொண்டிருக்க, கொரோனா தன் பங்கிற்கு முடக்க, திரையரங்குகளின் எதிர்காலம் எப்படியோ கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது!