ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது.
ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதைத் தொகுத்திருக்கிறேன்.
1. ராகுல் பேசிய மாநில உரிமை, கலாச்சாரம், பண்பாடு குறித்து மாநில கட்சிகள்தான் எப்போதும் பேசும். தேசிய கட்சியிடமிருந்து இந்தக் குரல் வந்திருப்பது மாநிலங்களை பிரித்தாளும் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
2. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து குரலையும் ஒடுக்கி வைத்துள்ளதை பாராளுமன்றத்திலேயே உடைத்தது.
3. மணிப்பூரைச் சேர்ந்த குழுவினர் அமித்ஷாவை சந்திக்க சென்றபோது
அவர்களின் செருப்பை கழற்றி உள்ளே அனுப்பியதுடன் அமித்ஷா மட்டும் செருப்பு அணிந்திருந்ததை கேள்வி கேட்டது.
4. நாட்டின் அடிப்படை கட்டமைப்பை பாஜக, ஆர்.எஸ்.எஸ் சிதைக்க முனைவதை பாராளுமன்றத்திலேயே அம்பலப்படுத்தியது.
5. சீனாவையும் பாகிஸ்தானையும் இணையவிடாமல் இத்தனை ஆண்டுகளாக பார்த்துக் கொண்டதையும், கடந்த ஏழாண்டுகளில் இந்த அரசின் முட்டாள்தனத்தால் அவர்கள் இணைந்து செயல்படுவதையும் போட்டு உடைத்தது.
6. நீட் தேர்வுக்கு ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு விலக்கு கேட்டும் கொடுக்காமல் இருப்பதை தமிழ்நாட்டின் குரலாகவே கேள்வி கேட்டது.
7. பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தையும் மரணத்தையும் இந்நாட்டின் மன்னராக தன்னை நினைத்துக்கொண்டு அவமதித்தது.
8. பாஸ்வானின் தலித் உரிமை போராட்டங்களுக்கு மதிப்பளித்து புகழ்ந்து பாஜகவின் கூட்டணிக்குள் குண்டு வைத்தது.
9. “இந்த நாட்டுக்காக என்னுடைய கொள்ளுத் தாத்தா 15 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார். என்னுடைய பாட்டி 32 முறை சுடப்பட்டார். என்னுடைய தந்தை துண்டு துண்டாக வீசப்பட்டார். அந்த ரத்தம் எனக்கு… எனக்கு தெரிகிறது. இந்த நாட்டை நீங்கள் ஆபத்தில் கொண்டு செல்கிறீர்கள்” என்று சொன்னது. (பொதுவாக ராகுல் செண்டிமெண்டாக பேசமாட்டார்) மோடியின் அந்த அஸ்திரத்தை ராகுல் எடுத்தது.
10. முக்கியமாக ராகுல் 45 நிமிட உரையில் உரிமைகளுக்காக கேள்வி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் எந்தத் துண்டுச் சீட்டையும் பயன்படுத்தவில்லை. தகவலுக்காக மட்டுமே கீழே பார்த்தார்.
11. மிக முக்கியமாக தேவைக்கு இந்தியை பயன்படுத்தி அதிகமாக ஆங்கிலத்தில் பேசியது.
நன்றி: முகநூல் பதிவு
05.02.2022 12 : 30 P.M