வேலைவாய்ப்பின்மை 6.57 சதவீதமாக குறைவு!

‘ஒமிக்ரான்’ வகை கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து நாடு மெல்ல விடுபட துவங்கி இருப்பதன் அறிகுறியாக, கடந்த ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் 6.57 சதவீதமாக குறைந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. எனப்படும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்,

“கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் 3.50 கோடி பேர் தீவிரமாக வேலை தேடி வந்தனர். இதில் 80 லட்சம் பேர் பெண்கள்.

இவர்களைத் தவிர மேலும் 1.70 கோடி பேர் வேலை கிடைத்தால் செய்ய தயாரான மனநிலையில் இருந்தனர். இவர்கள் தீவிரமாக வேலை தேடவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை 9.30 சதவீதமாகவும், கிராமப் புறங்களில் 7.28 சதவீதமாகவும் இருந்தது.

இது கடந்த மாதம் 6.57 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விகிதமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment