சிலருக்கு எதற்கொடுத்தாலும் பதற்றம் ஏற்படும். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை உண்டாக்கும்.
ஒரு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைத்து ஏமாறுவது, சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம், மன அழுத்தம், பயப்பட வைக்கும் சூழல், பெற்றோரிடம் இருந்து வரும் மறுப்பு போன்ற பல காரணங்களால் பதற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரியான முறையில் கையாண்டால் எளிதாக குணப்படுத்த முடியும். அதற்கான சில வழிகள்…
சில பெற்றோர்கள் அதிக கண்டிப்போடு நடந்து கொள்வார்கள். இதனால் பிள்ளைகளிடம் சிந்திக்கும் திறன் குறைந்து எப்போதும் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.
பதற்ற உணர்வு நீடிக்கும் போது சிலர் திறமை இருந்தும் வெளிப்படுத்துவதில் தயக்கத்துடன் இருப்பார்கள்.
பதற்றத்துடன் பயமும் அதிகரிக்கும் போது எதையும் கூர்ந்து கவனிக்க முடியாக நிலை ஏற்படும்.
பள்ளியில் நடத்தும் பாடங்களில் ஆர்வம் குறையும். இதை தவிர்ப்பதற்கு தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுமாறு பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.
வளர் இளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளை அவர்களுக்கு தெரியாமல் கவனிப்பது அவசியம். வழக்கமான செயல்களில் மாறுபாடு தெரிந்தால் இயல்பாக பேசி பிரச்சனையின் தீவிரத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதற்கான தீர்வை கூறி அவர்களே செயல்படுத்தும் படி தேவையான ஆலோசனையை வழங்கலாம். இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.
வளர் இளம் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு புரோட்டீன், வைட்டமின்கள் நிறைந்த சத்துள்ள உணவு அவசியமாகும்.
அதேபோல் போதுமான உறக்கமும் தேவை. இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் மனதில் புத்துணர்வை ஏற்படுத்த முடியும்.
வளர் இளம் பருவத்தில் இருப்பவர்கள் ஒன்றின் மீது நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது. எனவே இடையிடையே மனதை இலகுவாக்கும் பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
செல்ல பிராணிகளைக் குளிக்க வைப்பது, நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது என தினம் ஒரு பயிற்சியில் ஈடுபடுவது மனதை இலகுவாக்கும்.
– நன்றி: மாலை மலர்
02.02.2022 12 : 30 P.M