அருமை நிழல் :
‘குண்டப்பா’ – இப்படித்தான் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த நாகேஷை அழைத்திருக்கிறார்கள்.
துடியான பையனாக தாராபுரத்தில் உள்ள பள்ளியில் படித்தபோது, மாறுவேடப் போட்டி.
அதில் நாகேஷ் வந்தது எமனாக. முகத்தில் வரைந்த மீசை. கையில் ‘பாசக்கயிறு’.
உரிமையுடன் ‘பாசக்கயிற்றை’ வீசியபோது, அது விழுந்தது பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்தில்!
***
வார இதழ் போட்டி ஒன்றுக்காக வந்த கடிதங்களைப் பேரக்குழந்தைகளுடன் நாகேஷ் தேர்வு செய்தபோது எடுக்கப்பட்ட படம்.