பிப்-1 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள்!

– முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

கொரோனா அதிகரித்ததால், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

* கொரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதி நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்கு 28-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று ஜனவரி 30-ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

*பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்கள்,  தொழிற்பயிற்சி மையங்கள் ஒன்றாம் தேதி முதல் செயல்பட அனுமதி.

* துணிக்கடைகள், நகைகடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

* திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சியில் அதிகபட்சம் 100 வரை பங்கேற்க அனுமதி.

* அழகு நிலையங்கள், சலூன் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

* உணவு விடுதிகள், பேக்கரி உள்ளிட்ட இடங்களில் வாடிக்கையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து உண்ண அனுமதி.

* நீர்விளையாட்டுக்களைத் தவிர்த்து பொழுது போக்கு பூங்கா 50 சதவீத பேருடன் செயல்பட அனுமதி.

* உள்அரங்கில் நடத்தப்படும் கருத்தரங்கள், இசையரங்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம்.

* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

* வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, பிப்ரவரி 1 முதல் கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

* நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

* அரசு, தனியார் கலை நிகழ்ச்சிகள் பொருட்காட்சி நடத்தத் தடை நீட்டிப்பு.

* இறப்பு போன்ற நிகழ்சிகளில் கலந்த கொள்ள 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.

* சமுதாய, அரசிலயல் கட்சிகள் போனறவற்றின் கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு.

*  மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்படத் தடை விதிப்பு.

28.01.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment