– அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
அதிமுக ஆட்சியின்போது சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கின இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பும் வெளியானது.
இந்தநிலையில் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து விளக்கமளித்த பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.
இந்தக் கொள்கை முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும். அவர் முறையாக அறிவித்த பிறகு தான், தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறமுடியும்.
இப்போதைய சூழ்நிலையில் இந்தத் திட்டம் தொடங்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பது குறித்து நான் எந்த பதிலும் கூறமுடியாது” எனக் கூறினார்.