பெண்கள் என்றால் பாவமா?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்

(உன்னைத்தான்)

யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்

(உன்னைத்தான்)

காதலித்தல் பாபம் என்றால்
கண்களும் பாபமன்றோ
கண்களே பாபம் என்றால்
பெண்மையே பாபமன்றோ
பெண்மையே பாபமென்றால்
மன்னவரின் தாய் யாரோ

(உன்னைத்தான்)

– 1965-ம் ஆண்டு வெளிவந்த ‘வாழ்க்கைப் படகு‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி. குரல்-பி.சுசீலா.

Comments (0)
Add Comment