இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 இடங்களில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில், குரூப் 2 பிரிவின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 23ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சூப்பர் 12 சுற்றில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை, வங்கதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ளன.
நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்னில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.