மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!

ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை

இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.

அவரது பெயர் மகேஷ் சந்த் ஜெயின். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து காவல்துறையில் மூத்த உயர் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடனும் வாழ்க்கை மக்களிடம் மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார். ஒரு மரம் வளர்ப்பதன் மூலம் வாழ்க்கைச் சம்பவங்களை நினைவாக மாற்றுகிறார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரில் அதிக மக்கள் வாழும் நகரம். இங்கு போக்குவரத்து காவல்துறையின் அதிகாரியாக வந்த ஜெயின், தனக்காக மட்டும் மரங்கள் நடுவதில்லை.

மற்றவர்களையும் மரங்கள் வளர்க்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். காவலர்களையும் ஊழியர்களையும்கூட மரங்கள் வளர்க்க வைத்திருக்கிறார்.

தன் எஸ்யூவி காரில் எப்போதும் மரக்கன்றுகளுடன்தான் பயணம் செய்வார் ஜெயின். காவல் நிலையங்கள், தேவாலயங்கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்தில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரங்களை நடுவார். அந்தப் பணிகளில் கிராம மக்களையும் இணைத்துக்கொள்வார்.

இவருடைய மரம் நடு சேவை கடந்த ஜனவரி 6, 1999 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது அவர் நீமச் மாவட்டத்தில் சர்க்கிள் எஸ்பியாக பணியில் இருந்தார்.

“அந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது 1998 ஆம் ஆண்டு. நான் அப்போது ரெவின்யூ காலனியில் குடியிருந்தேன். எங்கள் வீட்டுக்கு முன்னால் பள்ளி மாணவர்கள் நிற்க நிழலில்லாமல் காத்திருப்பார்கள். அதுதான் நான் மரம் நட காரணமாக இருந்தது. என் மூத்த மகன் பிறந்த நாளன்று மரம் நட்டேன்” என்று ஜெயின் நினைவுகூர்கிறார்.

இன்று அவரைப் பார்த்து குடும்ப உறுப்பினர்கள், காவலர்கள், மக்கள் எனப் பலரும் பிறந்த நாளன்று மரங்கள் நடத் தொடங்கிவிட்டார்கள்.

தான் பணிக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மரங்களை நட்டிருக்கும் மகேஷ் சந்த் ஜெயின், கடந்த 25 ஆண்டுகளில் 50 ஆயிரம் மரங்கள் வளர்த்திருக்கிறார்.

பா.மகிழ்மதி

Comments (0)
Add Comment