– கண்ணதாசனின் நெகிழ்ச்சியான பேச்சு.
“என்னுடைய விழா ஒன்றில் நான் பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன், அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்யப் போன கால்கள், சிறைச்சாலையில் பல்லாண்டுகள் உலாவிய கால்கள், என்னுடைய கால்களுக்கு அந்த பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே” என்று பதில் சொன்னேன்.