குரலால் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி கோவிந்தராஜன்!

கணீர் என்று ஒலிக்கும் வெண்கலக்குரல் என்றால் நினைவில் ஓடுவது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான்.

“வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… எதிர்நீச்சல்’’ – என்ற  ‘எதிர்நீச்சல்’ படப் பாடலையும்,

“எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்’’ என்று துவங்கும் ‘படிக்காத மேதை’ படப் பாடலையும்,

“கண்ணிலே நீர் எதற்கு?’’ – ‘போலீஸ்காரன்’ படப் பாடலையும்,

“காதலிக்க நேரமில்லை” – நையாண்டியான பாடலையும்,

“ஓடம் நதியினிலே’’ – காத்திருந்த கண்கள் படப்பாடலையும்,

“உள்ளத்தில் நல்ல உள்ளம்’’ – ‘கர்ணன்’ படப் பாடலையும் மறக்க முடியுமா?

பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து, 1953-ல் ‘பொன்வயல்’ என்ற படத்தின் மூலம் பாடகராக நுழைந்து, ஏராளமான படங்களில் பாடி,

‘அகத்தியர்’ போன்ற படங்களில் நடித்து, ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் முத்திரை பதித்தவர்.

தமிழிசைக் கச்சேரிகளில் தனித்து வலம் வந்தது அவருடைய குரல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களில் பல முத்திரைப் பாடல்களைப் பாடியிருக்கிற சீர்காழியின் குரலில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இடம் பெற்ற… “வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..”, “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’’ என்ற பாடல் – இப்போதும் அ.தி.மு.க.வின் கொள்கை கீதம்.

சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப்பித்தன், ராஜராஜன் போன்று எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருந்தாலும், கலைவாணருடன் டேப்பை அடித்தபடி பாடும் ‘சக்கரவர்த்தி திருமகள்’ பாடல் பிரபலம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் செழுமையான வரிகளைக் கொண்ட “உழைப்பதிலா.. உழைப்பைப் பெறுவதிலா” என்று துவங்கும் ‘நாடோடி மன்னன்’ (1958) பாடல் சிறப்பு.

இன்னும்…

• நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)

• எல்லை இல்லாத இன்பத்திலே (சக்கரவர்த்தி திருமகள்)

• வண்டு ஆடாத சோலையில், ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)

• சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை 1961)

• ஓடிவந்து மீட்பதற்கு – (நான் ஆணையிட்டால்) – ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்

• யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)

• ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)

– என்று குரலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தமிழிசைக் கலைஞர் சீர்காழி கோவிந்தராஜன்.

– நன்றி: முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment